சுகம் தரும் சுத்தமான காற்று
வீட்டிற்குள் சுத்தமான காற்றை சுவாசிக்கனும்னா இதெல்லாம் செஞ்சுதான் ஆகணும்!
If you want to Breathe Clean Air inside the House, All this must be done!
நமக்கு தெரியாதவாறு பல்வேறு பாக்டீரியாக்கள், அலர்ஜியை ஏற்படுத்தக்கூடிய கிருமிகள், வைரஸ்கள், அழுக்கு மற்றும் தூசு போன்றவை வீட்டிற்குள் நுழைந்திருக்கலாம். இவை நம்முடைய வீட்டில் உள்ள ஜன்னல் மற்றும் கதவு வழியாக வந்திருக்கலாம். இதுவும் நம்முடைய வீட்டிற்குள் இருக்கும் காற்றின் தரத்தை மோசமாக்கும்.
தற்போது நிலை:
காற்று மாசுபாடு குறித்து நாம் அதிக கவலைப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஏனெனில் இது நம்முடைய ஆரோக்கியத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகிறது. வீட்டை விட்டு வெளியே செல்லும்போது இருக்கக்கூடிய இந்த நிலைமையை நினைத்து வருத்தப்படும் அதே நேரத்தில் வீட்டிற்குள் உள்ள காற்றின் தரத்தை பற்றியும் நாம் சற்று யோசித்துப் பார்க்க வேண்டும்.
நமக்கு தெரியாதவாறு பல்வேறு பாக்டீரியாக்கள், அலர்ஜியை ஏற்படுத்தக்கூடிய கிருமிகள், வைரஸ்கள், அழுக்கு மற்றும் தூசு போன்றவை வீட்டிற்குள் நுழைந்திருக்கலாம். இவை நம்முடைய வீட்டில் உள்ள ஜன்னல் மற்றும் கதவு வழியாக வந்திருக்கலாம். இதுவும் நம்முடைய வீட்டிற்குள் இருக்கும் காற்றின் தரத்தை மோசமாக்கும். எனவே வீட்டிற்குள் இருக்கும் காற்றின் தரத்தை சிறந்த முறையில் பராமரிப்பதற்கு நாம் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது அவசியம். அந்த வகையில் வீட்டிற்குள் சுத்தமான காற்றை சுவாசிப்பதற்கு உதவும் ஒரு சில குறிப்புகளை பார்ப்போம்.
வீட்டிற்குள் மாசுபாட்டை குறைக்கவும் :
வீட்டிற்கு வெளியே உள்ள காற்றினை நம்மால் கட்டுப்படுத்த முடியாது. ஆனால் நிச்சயமாக வீட்டிற்குள் இருக்கும் காற்றின் தரத்தை சரி செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபடலாம். எனவே வீட்டிற்குள் இருக்கும் காற்றின் தரத்தை மோசமாக்கும் எந்த ஒரு விஷயங்களையும் செய்யாதீர்கள். உதாரணமாக புகைப்பிடித்தல், வீட்டை சரியாக சுத்தம் செய்யாமல் இருத்தல், சரியான காற்றோட்டம் இல்லாமல் இருப்பது, அதிக வாசனை நிறைந்த பொருட்களைப் பயன்படுத்தி சுத்தம் செய்வது போன்ற செயல்பாடுகளை தவிர்த்து விடுங்கள். இந்த விஷயங்களை தவிர்ப்பது வீட்டிற்குள் இருக்கும் காற்றின் தளத்தை மேம்படுத்தும்.
போதுமான காற்றோட்டம் :
வீட்டிற்குள் எப்போதும் காற்றோட்டம் இருப்பதை உறுதி செய்யுங்கள். வீட்டிற்கு வெளியே உள்ள காற்றின் தரம் ஓரளவு நன்றாக இருக்கிறது என்று உங்களுக்கு தோன்றினால் வீட்டில் உள்ள ஜன்னல் கதவுகளை திறந்து வைக்க தயங்காதீர்கள். இதனால் உங்களுக்கு ஃபிரஷ்ஷான மற்றும் சுத்தமான காற்று கிடைக்கும். மேலும் வீட்டிற்குள் இருக்கும் காற்றில் கலந்துள்ள நுண்ணுயிரிகள் வெளியேறும்.
வீட்டை சுத்தமாக வைக்கவும் :
அவ்வப்போது வீட்டை சுத்தம் செய்வது மூலமாக தேவையில்லாத அழுக்கு மற்றும் தூசுகளில் இருந்து விடுபட்டு வீட்டிற்குள் இருக்கும் காற்றின் தரத்தை மேம்படுத்தலாம். வீட்டில் உள்ள மேற்பரப்புகளை தூசு தட்டுவது வீட்டில் உள்ள காற்றின் தரத்தை அதிகரிக்கும்.
"This Content Sponsored by Buymote Shopping app
BuyMote E-Shopping Application is One of the Online Shopping App
Now Available on Play Store & App Store (Buymote E-Shopping)
Click Below Link and Install Application: https://buymote.shop/links/0f5993744a9213079a6b53e8
Sponsor Content: #buymote #buymoteeshopping #buymoteonline #buymoteshopping #buymoteapplication"
Comments
Post a Comment